Connect with us

தமிழ்நாடு

மதுரையில் உள்ள ஐந்து தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு!

Published

on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் யார் என்பது குறித்த கருத்துக் கணிப்பு வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தந்தி டிவி எடுத்துள்ள கருத்துக் கணிப்பில் மதுரையில் உள்ள ஐந்து தொகுதிகள் யாருக்கு என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

மதுரை மேற்கு தொகுதியில் அதிமுகவுக்கு சாதகமாக இருப்பதாகவும் அந்த கூட்டணிக்கு 43 சதவீத வாக்குகளும் திமுகவுக்கு 39 சதவீத வாக்குகளும்கிடைக்கும் என்று கணித்துள்ளது. மதுரை வடக்கு தொகுதியில் திமுகவிற்கு சாதகம் என்றும் திமுகவுக்கு 41 சதவிகிதம் பாஜகவிற்கு 38% கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது.

மதுரை தெற்குத் தொகுதி அதிமுகவுக்கு சாதகம் என்றும் அதிமுகவுக்கு 42% மதிமுகவுக்கு 40% என்று குறிப்பிட்டுள்ளது. மதுரை மத்திய தொகுதி திமுகவிற்கு கிடைக்கும் என்றும் அந்த தொகுதியில் திமுகவுக்கு 48% அதிமுக கூட்டணிக்கு 38% கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.கடைசியாக மதுரை கிழக்கு தொகுதியில் திமுகவுக்கு சாதகம் என்றும் திமுக வேட்பாளர் 45 சதவீத வாக்குகளை பெறுவார் என்றும் அதிமுக வேட்பாளர் 42 சதவீத வாக்குகளை பெறுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
carrd charges for essential features like forms and custom domains.