சினிமா செய்திகள்
மாநாடு படத்திலிருந்து விலகிய இயக்குநர்.. அதிர்ச்சியில் படக்குழு!

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கி வரும் படம் மாநாடு. நீண்ட பிரச்சனைகளுக்குப் பிறகு தொடர்ந்து நடைபெற்று வரும் மாநாடு படப்பிடிப்பு 75 சதவீதம் வரை முடிந்துள்ளது.
இன்னும் அரசியல் மாநாடு பற்றிய காட்சிகள் மற்றும் விமானத்தில் எடுக்க வேண்டிய சில காட்சிகள் மட்டும்தான் பாக்கி உள்ளதாம். ஆனால் தொடர் மழை காரணமாக ஷூட்டிங் இப்போது தடைபெற்றுள்ளது.
இந்நிலையில் மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த இயக்குநர் பாரதிராஜா விலகுவதாகத் தெரிவித்துள்ளார். இப்போது சத்தியமங்கலம் காட்டில் ஜிவி.பிரகாஷ் நடித்து வரும் படப்பிடிப்பில் பாரதிராஜா கலந்துகொண்டு வருகிறார். இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு உள்ளது.
அந்த படத்தை புதிய இயக்குநர் ஒருவர் இயக்கி வருகிறார். அவரது இயக்கம் மற்றும் கதாபாத்திரத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ள பாரதிராஜா, மாநாடு படத்தில் நடிக்க இருந்த தேதியையும் அந்த படத்திற்கே ஒதுக்கியுள்ளார், எனவே மாநாடு படக்குழு வேறு நடிகரைத் தேடி வருகிறது.

ஜி.பிரகாஷ் படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் பாரதிராஜா நடிப்பார் என்று கூறப்படுகிறது. அந்த படப்பிடிப்பும் சத்தியமங்களம் காட்டில் நடைபெற்று வருகிறது. சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படத்திலும் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


















