தமிழ்நாடு
எதிர்க்கட்சி தலைவர் பதவியில் திடீர் திருப்பம்: ஓபிஎஸ் முன்மொழிந்த பெயர் யார் தெரியுமா?

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக 65 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதையடுத்து தற்போது எதிர்கட்சியாக மாறியுள்ளது. இருப்பினும் அக்கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது
கடந்த 7ஆம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் கூடி எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய முயற்சித்தனர். ஆனால் ஓபிஎஸ் ஈபிஎஸ்ஆதரவாளர்களிடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து மே 10ஆம் தேதி எதிர்கட்சி தலைவரை தேர்வு செய்யும் செய்ய முடிவு செய்யப்பட்டது
இதனையடுத்து இன்று காலை அதிமுக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கூடி எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்றும் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஆகிய இருதரப்பும் கூச்சல் குழப்பங்கள் செய்து கொண்டிருக்கையில் திடீரென ஓபிஎஸ் முன்னாள் சபாநாயகர் தனபால் பெயரை எதிர்க்கட்சித் தலைவராக முன்மொழிந்தார். இதனால் ஈபிஎஸ்தரப்பினர் முடிவெடுக்க முடியாமல் திணறி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் தனபால் பெயரை எதிர்கட்சி தலைவர் பதவியை ஓபிஎஸ் முன்மொழிந்தது புதிய திருப்பமாக காணப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் ஈபிஎஸ்ஆகிய இருவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லாமல் முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன















