கிரிக்கெட்
7 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை போராடி வென்றது டெல்லி!

16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது. ராஜிவ் மைதானத்தில் நேற்றிரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்தது.
ஐதராபாத் அணி 144 ரன்கள்
தொடக்க வீரர்களாக வார்னர், பில் சால்ட் களமிறங்கினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை எடுத்தது. டெல்லி அணித் தரப்பில் அக்ஷர் படேல் மற்றும் மனிஷ் பாண்டே தலா 34 ரன்களை குவித்தனர். ஐதராபாத் அணித் தரப்பில் பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட் கைப்பற்றினார். வாஷிங்டன் சுந்தர் 3, நடராஜன் 1 விக்கெட் வீழ்த்தி அசத்தினர்.
டெல்லி போராடி வெற்றி
அடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 49 ரன்கள், கிளாசன் 31 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 24 ரன்கள் எடுத்தனர். டெல்லி பந்துவீச்சில் நார்ட்ஜ், அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். டெல்லி அணி தனது 2வது வெற்றியைப் பதிவு செய்து 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.