பங்கு சந்தை
படுபாதாளத்தை நோக்கி எல்ஐசி…அடுத்து என்ன ஆகும் என திகிலில் முதலீட்டாளர்கள்….

வாடிக்கையாளர்கள் செலுத்தும் பாலிசி தொகையில் ஒரு பகுதியை எல் ஐ சி பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகிறது. இந்த நிலையில் பங்குச்சந்தை கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால், எல் ஐ சி முதலீடு செய்துள்ள பங்குகளின் மதிப்பு சரிந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி சந்தை சரிவின் நெருக்கடியில் சிக்கியுள்ளது. எல் ஐ சியின் பங்குச் சந்தைகளின் மதிப்பில் ரூ.1.45 லட்சம் கோடி அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு டிசம்பரில் ரூ.14.9 லட்சம் கோடியாக இருந்த எல்ஐசியின் போர்ட்ஃபோலியோ மதிப்பு பிப்ரவரி மாதத்தின் இறுதியில் ரூ.13.4 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
எல் ஐ சி முதலீடு பங்குகளில் எந்த பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ள என்று பார்ப்போமா.
ஐடிசி, டிசிஎஸ் மற்றும் எஸ்பிஐ ஆகிய பங்குகளின் வீழ்ச்சி அதிக அளவில் உள்ளன. எல்ஐசியின் இரண்டாவது பெரிய பங்கு நிறுவனமான ஐடிசி, அதன் போர்ட்ஃபோலியோவில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஐடிசி பங்குகளின் 18% சரிவு ஏற்பட்டுள்ளதால் சுமார் ரூ.17,000 கோடி குறைந்துள்ளது. . எல்ஐசி முறையே 4.75% மற்றும் 10.58% பங்குகளை வைத்திருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் ஆகியவையும் சரிந்து, ரூ.10,509 கோடி மற்றும் ரூ.7,640 கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளன.
வங்கி மற்றும் நிதிப் பங்குகளில், எஸ்பிஐ (9.13% பங்குகள்) மற்றும் ஐசிஐசிஐ வங்கி (7.14% பங்குகள்) ஆகியவற்றில் எல்ஐசியின் குறிப்பிடத்தக்க பங்குகள் முறையே ரூ.8,568 கோடி மற்றும் ரூ.3,179 கோடி சரிந்தன. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் மிக மோசமான பாதிப்புக்குள்ளான பங்குகளில் ஒன்றாக உள்ளது. பங்கின் விலை கிட்டதட்ட 30.5% சரிந்துள்ளது. இதன் காரணமாக எல்ஐசியின் பங்குகளில் ரூ.3,546 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. L&T, HCL Tech, மற்றும் M&M, Jio Financial, ICICI Bank, Adani Ports மற்றும் JSW Energy ஆகியவை அதிக நஷ்டம் ஏற்படுத்திய பங்குகள் ஆகும். எல்ஐசி 310 நிறுவனங்களின் பங்குகளில் ஒரு சதவிகிதத்துக்கு அதிகமான பங்குகளை வைத்துள்ளன. இந்த ஆண்டு LIC நிறுவனம் 35 பங்குகளில் மட்டும் ரூ.1,000 கோடி சரிவைச் சந்தித்துள்ளது.
எல்ஐசியின் மிகப்பெரிய பங்குகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ரூ.1,03,727 கோடி), ஐடிசி ((ரூ.75,780 கோடி), இன்ஃபோசிஸ் (ரூ.67,055 கோடி), எச்டிஎஃப்சி வங்கி (ரூ.62,814 கோடி), டிசிஎஸ் (ரூ.59,857 கோடி), எஸ்பிஐ (ரூ.55,597 கோடி), மற்றும் எல்&டி (ரூ.54,215 கோடி) ஆகியவை ஆகும்.எல்ஐசியின் போர்ட்ஃபோலியோவில் பஜாஜ் ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, மாருதி சுசுகி, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் எஸ்பிஐ கார்டுகள் ஆகியவை அடங்கும்.
எல்ஐசியின் 60000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தனியாருக்கு விற்று ஒன்றிய அரசு தவறு செய்ததை சரிப்படுத்தவே திணறிக் கொண்டிருக்கும் எல்ஐசி நிறுவனம் பாலிசிதாரர்களின் வருமானத்தை சமநிலைப்படுத்தும் அதே வேளையில், இந்த புயலை எல்ஐசி எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும்.














