உலகம்
அடுத்த தாலாய் லாமா யார்? ஆன்மீக மரபும் அரசியல் மோதல்களும்!

ஜூலை 6ம் தேதி 90வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ள தாலாய் லாமா, திபெத்திய புத்தமத உலகத்தில் மட்டுமல்லாமல், உலக அளவிலேயே ஆன்மீகத் தலைவராக போற்றப்படுகிறார். ஆனால், அவரது வயது மூப்பும் எதிர்கால வழிகாட்டியின் தேடலும் இன்று சர்வதேச அரசியல் மற்றும் ஆன்மீக உலகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
திபெத்திய புத்தமத மரபின்படி, தாலாய் லாமா மறைவுக்குப் பிறகு மறுஜென்மம் கொள்கிறார் என்றும், அதனை கண்டறியும் ஒரு ஆன்மீக முறையே பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதில், திபெத்திய தலைமை லாமாக்கள், தர்ம பாதுகாப்பாளர்கள் (Dharma Protectors), தியானம், அடையாளக் கனவுகள் போன்ற ஆன்மீக வழிமுறைகள் பெரும் பங்காற்றுகின்றன.
இந்நிலையில், 14வது தாலாய் லாமா கூறுவது: “என் மறுஜென்மம் சீனாவில் நிகழாது. அதனை ஆன்மீக மரபின்படி திபெத்திய மதத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும்,” என்பது. ஆனால் சீனா, திபெத்திய நம்பிக்கையை முற்றிலும் எதிர்த்து, தாலாய் லாமாவின் அடுத்த வடிவத்தை “கோல்டன் எர்ண்” (Golden Urn) என்ற ஒரு அரசியல்மயமான முறையில் தேர்வு செய்ய வேண்டும். இது, மத சுதந்திரத்திற்கு எதிரான ஒரு கடும் அரசியல் தலையீடாக திபெத்தியர்கள் மற்றும் உலக மக்களால் பார்க்கப்படுகிறது.
இந்த மோதல், ஒரு அரசியல் ஆக்கிரமிப்பைத் தாண்டி, ஒரு ஆன்மீக மரபின் நிலைத்தன்மை, ஒரு இனத்தின் அடையாளம் மற்றும் ஆன்மீகத் தலைவர் மீதான நம்பிக்கையின் சோதனையாக மாறியுள்ளது. எதிர்காலத்தில், ஒரு திபெத்தியர் அங்கீகரிக்கும் தாலாய் லாமா, மற்றொன்று சீனா தேர்ந்தெடுக்கும் தாலாய் லாமா என இரண்டு வேறுபட்ட ஆன்மீக தலைவர்கள் உருவாகலாம் என்பதற்கான பயமும் இந்த விவகாரத்தில் உள்ளது.
இது வெறும் மதப் பிரச்னையாக அல்ல, முழு திபெத்திய கலாசாரம், மரபு, மற்றும் ஆன்மீக அடையாளத்தைப் பாதுகாக்கும் போராட்டமாக பார்க்கப்படுகிறது.
















