Connect with us

உலகம்

திருமணமாகாமல் குழந்தைகள் பெற்ற ரொனோல்டா சவுதியில் வாழ முடியுமா? சட்டம் என்ன சொல்கிறது?

Published

on

உலகப் புகழ்பெற்ற ரொனோல்டா தற்போது சவுதி அரேபிய அணியில் விளையாட இருக்கும் நிலையில் சவுதி அரேபியாவில் திருமணம் செய்யாத தம்பதிகள் ஒன்றாக ஒரே அறையில் தங்க சட்டம் இடம் தராது என்பதால் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான ரொனால்டோ கடந்த வாரம் சவுதி அரேபியாவில் உள்ள அல் நாசர் என்ற அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு இந்திய மதிப்பில் 1700 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சவுதி அரேபிய அணிக்காக அவர் தொடர்ச்சியாக இரண்டரை ஆண்டுகாலம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சவுதி அரேபியாவின் சட்டப்படி திருமணம் செய்யாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்க அனுமதி இல்லை. ஆனால் ரொனால்டோ தனது காதலி ஜார்ஜினாவுடன் திருமணம் செய்யாமல் உறவில் இருக்கிறார் என்பதும் இந்த ஜோடிக்கு இரட்டை பெண் குழந்தை உள்பட 3 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சவுதி அரேபியாவில் அவர் தனது காதலி மற்றும் குழந்தையுடன் தங்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இது குறித்து சவுதி அரேபியா அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். சவுதி அரேபியாவின் சட்டம் சவுதி அரேபியா குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் ரொனால்டோ வெளிநாட்டு வீரர் என்பதால் அவருக்கு இந்த சட்டம் பொருந்தாது என்றும் ஆனால் அதே நேரத்தில் ஏதேனும் குற்றச்செயல் வந்தால் மட்டுமே சவுதி அரேபியாவின் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இப்போதைக்கு அவர் தனது காதலி மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் தங்கியிருப்பதற்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ரொனோல்டாவை எதிர்த்து சவுதி அரேபியாவில் உள்ள எவரும் வழக்கு தொடரப் போவதில்லை என்றும் அந்த அளவுக்கு அவரை அனைவரும் விரும்புகிறார்கள் என்றும் அவர் தங்கள் நாட்டிற்காக விளையாட வந்துள்ளார் என்ற பெருமை ஒவ்வொரு சவுதி அரேபிய குடிமகனுக்கும் உள்ளது என்றும் கூறியுள்ளார். எங்கள் நாட்டிற்காக ஏராளமான வெற்றியை இந்த இரண்டரை ஆண்டுகளில் அவர் பெற்றுத் தருவார் என்பதால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எங்களுக்கு கவலை இல்லை என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?