கிரிக்கெட்
பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன்வார்னே காலமானார்: மாரடைப்பு என தகவல்!

உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன்வார்னே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தாய்லாந்து நாட்டிற்கு சென்று இருந்ததாகவும் அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ஷேன்வார்னே ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். உலகின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ஷேன்வார்னே 145 போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
ஷேன்வார்னே மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் உட்பட உலக கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.





















