வைரல் செய்திகள்
மாஸ்டர் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உற்சாக நடனமாடிய கிரிக்கெட் வீரர்கள்..!- வீடியோ

மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு கிரிக்கெட் வீரர்கள் இணைந்து நடனம் ஆகிய வீடியோ காட்சி தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் திரை அரங்கங்களில் வெளியானது. சமீபத்தில் அமேசான் ப்ரைம் தளத்திலும் மாஸ்டர் படம் வெளியாகி உள்ளது. மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து இழுத்துள்ளது.
அனிருத் இசையில் உருவாகி உள்ள மாஸ்டர் பட பாடல்களுக்கு ஆடியோ வெளியீட்டின் (மார்ச் 2020) போது இருந்தே ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்து வந்தனர். ரசிகர்கள் பலரும் வாத்தி கம்மிங், வாத்தி ரெய்டு ஆகிய பாடல்களுக்குத் தொடர்ந்து ஆடி சமுக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வந்தனர்.
இந்த சூழலில் தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட தமிழக கிரிக்கெட் வீரர்கள் இணைந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடியிருப்பது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 13 ஆண்டுகளுக்கு பிறகு சையத் முஸ்தாக் அலி கோப்பையை 2வது முறையாக உச்சி முகர்ந்தது தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி. இதன் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது தான் இந்த நடன வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
தினேஷ் கார்த்திக் மற்றும்
தமிழ்நாடு கிரிக்கெட் அணி வீரர்கள்
தளபதியின் மாஸ்டர் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடும் காட்சி..ஆல் ஏரியாவிலயும் தளபதி கில்லிடா…!! pic.twitter.com/GQ3oDKc3Ur
— Dr.ECR.P.Saravanan (@Dr_Ecr_official) February 1, 2021














