தமிழ்நாடு
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின்: காரணம் இதுதான்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற பின் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என்பதும், தமிழகத்துக்கு தேவையான நிதிகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆலோசித்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் பிரதமர் மோடியை முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து ஒரு சில நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் தற்போது மீண்டும் பிரதமரை சந்திக்க டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக மாநில அரசும், மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என தமிழக அரசும் மாறி மாறி கொண்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அவர்கள் டெல்லி சென்று பிரதமர் மோடியை மேகதாது அணை விவகாரம் குறித்து சந்திக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன./ இதனை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய டெல்லி செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்த நாட்களில் கர்நாடகம் மற்றும் தமிழக முதல்வர்கள் பிரதமர் மோடியை மேகதாது அணை விவகாரம் ஆக சந்திக்க உள்ளனர் என்பதால் இந்த விவகாரத்தில் பிரதமர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





















