தமிழ்நாடு
ஒமிக்ரான் அதிகரிப்பால் இரவு நேர ஊரடங்கா? முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தற்போது ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1700ஐ தாண்டி விட்டது என்பதும் குறிப்பாக சென்னையில் மட்டும் தினசரி பாதிப்பு 800ஐ தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தாலும் தற்போது ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து கூடுதல் கட்டுப்பாடு விதிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆலோசனையில்இரவு நேர ஊரடங்கு, கோவில்களில் கட்டுப்பாடு, கல்லூரி வகுப்புகள் முறைப்படுத்துவது, கடைகள் செயல்படும் நேரத்தை குறைப்பது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே கொரோனா வைரஸ் முதல் மற்றும் இரண்டாவது அலையின்போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் போல் மீண்டும் தமிழகத்தில் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருப்பது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

















