தமிழ்நாடு
சென்னை அவுட்டர் ரிங் ரோடு சாலையில் பயணிக்க டோல் கட்டணமா?

சென்னை அவுட்டர் ரிங் ரோடு சாலையில் பயணிக்க டோல் கட்டணம் வசூலிக்கத் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் முடிவு செய்துள்ளது.
மீஞ்சூர் முதல் வண்டலூர் வரையிலான இந்த சாலை 60.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த சாலையைக் கட்டமைக்கத் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் 1,184 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.
இந்த சாலையில் டோல் அமைக்கப்பட்டு வரும் வருவாயைத் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகத்துக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டோல் கட்டணம் மூலம் குறைந்தது 1000 கோடி ரூபாய் வருமாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
டோல் கட்டணத்தை வசூலிப்பதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்துக்கு 15 முதல் 20 ஆண்டுகள் வரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.