தமிழ்நாடு
பிப்ரவரி 1-ம் தேதி மகாபலிபுரம் செல்ல பொது மக்களுக்கு அனுமதியில்லை.. என்ன காரணம்?

பிப்ரவரி 1-ம் தேதி மகாபலிபுரம் செல்ல பொது மக்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜி20 மாநாடு 2023 விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முக்கிய கூட்டம் ஒன்று சென்னையில் நடைபெற உள்ளது.

G20 India 2023
அதனை முன்னிட்டு சென்னை வரும் 100 முக்கிய பிரதிநிதிகள் ஐஐடி மெட்ராஸில் நடைபெறும் G20 கல்வி பணிக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தை முடித்துக்கொண்டு இவர்கள் சென்னை அருகில் உள்ள மகாபலிபுரம் சென்று பார்வையிட உள்ளதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே பிப்ரவரி 1-ம் தேதி பொதுமக்களுக்கு டிக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாகக் கூட முன்பதிவு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிப்ரவரி 1-ம் தேதி மகாபலிபுரத்தில் தனியார் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.