Connect with us

தமிழ்நாடு

சென்ட்ரல் எம்ஜிஆருக்கு, எழும்பூர் கருணாநிதிக்கா? சட்டசபையில் கோரிக்கை!

Published

on

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் வைக்கப்பட்டது போல் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அதிமுக ஆட்சியின் போது டாக்டர் எம்ஜிஆர் ரயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி அவர்களிடம் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்த கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடி அதே கூட்டத்திலேயே அது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என பிரதமர் மோடி அறிவித்ததை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகமும் அதற்கு ஒப்புதல் அளித்தது. சினிமா அரசியல் ஆகிய இரண்டு துறைகளிலும் சாதனை செய்தவர் எம்ஜிஆர் என்பதால் அவருடைய பெயர் ரயில் நிலையத்திற்கு வைக்க ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி மாறிய நிலையில் பல்வேறு பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில நாட்களாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று சட்டசபை கூட்டத்தில் பேசிய திமுக எம்எல்ஏ பரந்த ராமன் எழும்பூர் ரயில் நிறுத்தம் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1905 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சியின் போது எழும்பூர் ரயில் நிலையம் கட்டப்பட்டது என்பதும், 116 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த ரயில் நிலையத்தில் தினமும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வருகை தருகின்றனர் என்பதும் இங்கே 11 நடைமேடைகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை வைத்தது அடுத்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்கப்படுமா? தமிழக அரசு அதற்கு கோரிக்கை வைத்தாலும் மத்திய அரசு அதற்கு சம்மதம் தெரிவிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Legacy wife. With its commitment to excellence, diversity, and professional development, ccj provides an enriching environment where both. Mts havaldar exam will be conducted in october november ..