தமிழ்நாடு
முதல்வர் ஸ்டாலினின் மிகப்பெரிய எதிரி கருணாநிதி தான்: ரோஜா அதிரடி பேச்சு!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் நடிகையும் ஆந்திர அமைச்சருமான ரோஜா முதல்வர் மு.க.ஸ்டாலினின் மிகப்பெரிய எதிரியாக முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் என குறிப்பிட்டார்.

#image_title
சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ரோஜாவின் பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அப்போது பேசிய அவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் முன் மிகப்பெரிய எதிரி ஒருவர் இருக்கிறார். அவரை ஜெயித்தால் மட்டுமே, ஸ்டாலின் வெற்றிகரமான முதல்வராக வருவார். அந்த எதிரி யார் தெரியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, அந்த எதிரி கலைஞர் கருணாநிதி அவர்கள்தான். கருணாநிதி தமிழகத்துக்கு மிகப்பெரிய சாதனை திட்டங்களை கொடுத்தவர். அவர் செய்ததை மிஞ்சி, அவரைத் தாண்டி மக்களுக்கு செய்தால்தான் ஸ்டாலின் வெற்றிகரமான முதல்வராக முடியும் என்றார். மேலும், தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள். அதன்படி, கருணாநிதியை மிஞ்சிய முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும் என இந்த பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் என்று பேசினார் ரோஜா.