Connect with us

தமிழ்நாடு

உதயநிதி மகன் வந்தாலும் ‘வாழ்க’ சொல்லுவோம்: அமைச்சர் கே.என்.நேரு

Published

on

தமிழக முதல்வரின் மகனும் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி சமீபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றதற்கு ஒரு சில அரசியல் கட்சிகள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றன என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் அதற்கு பதிலடி தரும் வகையில் உதயநிதி மகன் வந்தாலும் அவருக்கு நாங்கள் ’வாழ்க’ சொல்லுவோம் என அமைச்சர் கேஎன் நேரு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என அந்த கட்சியில் உள்ள மூத்த அமைச்சர்கள் மற்றும் அனைத்து தொண்டர்களும் விரும்பியதால் நடந்ததாக திமுக தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

ஆனால் ஒரு குடும்பமே திமுகவை கட்டுப்படுத்தி வருகிறது என வானதி சீனிவாசன் உள்பட பல தெரிவிக்கின்றனர். 50 ஆண்டு காலமாக திமுக தலைவராக கருணாநிதி இருந்தார் என்றும், அதன்பின் முக ஸ்டாலின் அதன்பின் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் என்றும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் ஒரு கட்சி 50 ஆண்டுகளுக்கும் மேல் இருப்பது உலகிலேயே இங்கு மட்டும்தான் என்று வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார்.

இதேபோல் அதிமுக மற்றும் பாஜகவினர் உதயநிதி அமைச்சரானது குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் கேஎன் நேரு தமிழ்நாட்டை பொறுத்தவரை நாங்கள் எல்லோரும் சாதாரண நபர்கள். எங்களை அமைச்சராக்கி அழகு பார்த்தது கருணாநிதி அவர்களின் குடும்பம் தான். எங்களை போல் எண்ணற்றவர்களை தலைவர்களாகவும் அமைச்சர்களாகவும் உருவாக்கிய குடும்பம்தான் கருணாநிதி குடும்பம். அந்த குடும்பத்திற்கு விசுவாசம் இல்லாமல் நாங்கள் யாருக்கு விசுவாசமாக இருக்க போகிறோம்?

எனவே உதயநிதி அல்ல அவருடைய மகன் வந்தால் கூட அவருக்கு நாங்கள் வாழ்க செல்வோம். எங்களிடம் வாரிசு அரசியல் என்று சொல்லி எங்களை எதுவும் செய்ய முடியாது. மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மட்டும் தான் அனைத்து சமுதாய மக்களுக்கும் வாய்ப்பு தரும் ஒரே இயக்கமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்11 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?