இந்தியா
2ஆம் கட்ட சிபிஎஸ்இ தேர்வு இன்று தொடக்கம்

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் கட்ட தேர்வு ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடந்த நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்ற சிபிஎஸ்இ பொதுத்தேர்வு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டது. முதல்கட்ட பொதுத்தேர்வு கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட பொது தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்வு நேரடி முறையில் நடைபெற உள்ளது என்பதும், இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 7407 மையங்களில் 21.16 லட்சம் மாணவர்கள் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர் என்பதும், அதேபோல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 6720 மையங்களில் 14.54 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.