உலகம்
தாய்ப்பாலில் நகைகள் செய்து அசத்தும் பெண்: ரூ.1.50 கோடி வருமானம் என தகவல்

லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தாய்ப்பாலில் நகைகள் செய்து அசத்தி வரும் நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் வருமானம் வரும் அளவுக்கு இந்த நிறுவனத்தை மாற்றம் உள்ளதாக அவர் கூறினார்
தாய்பால் என்பது தாய்க்கும் குழந்தைக்கும் இடையே உள்ள ஒரு அற்புதமான உணர்வு என்பதும் தாய்ப்பால் கொடுப்பது என்பது ஒவ்வொரு தாய்க்கும் ஒரு வித்தியாசமான உணர்வு என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் தாய்ப்பால் மூலம் நகைகள் செய்வதை கேள்விப்பட்ட லண்டனை சேர்ந்த சாஃப்யா என்ற பெண் இதற்காக மெஜந்தா பிளவர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். தாய்ப்பால் குறித்து பல்வேறு ஆய்வுகள் செய்த சாஃப்யா, தாய் பால் கெட்டுப்போகாமல் மாற்றி அதனை நகையாக மாற்றியுள்ளார்
இந்த நகைகள் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு உணர்ச்சிகரமானது என்றும் தங்கம் வெள்ளி நகைகளை விட இது பெண்களுக்கு மிகவும் மதிப்புடையதாக கருதப்படுகிறது என்றும் சாஃப்யா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மூன்று குழந்தைகளுக்கு தாயான சாஃப்யா தாய்ப்பால் கொடுப்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் எவ்வளவு கடினமானது என்பதை உணர்ந்து குழந்தைகளுக்கும் தாய்க்கும் உள்ள தொடர்பை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நிறுவனத்தை தொடங்கியதாக கூறியுள்ளார்
தற்போது இந்த நிறுவனம் சுமார் 4000 ஆர்டர்களை பூர்த்தி செய்துள்ளதாகவும், வரும் 2023-ம் ஆண்டுக்குள் இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 1.50 கோடி ரூபாய் வரை திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் சாஃப்யா தெரிவித்துள்ளார்.

















