தமிழ்நாடு
அதிமுக கூட்டணியில் பாஜக கேட்கும் தொகுதிகள்: ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகுமா?

அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எத்தனை தொகுதிகள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டாலும் தற்போது இரு தரப்பினரும் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக கிடைக்கும் தொகுதிகள் எவை எவை என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த பட்டியல் பின்வருமாறு;
சேப்பாக்கம், மயிலாப்பூர், துறைமுகம், கொளத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆலந்தூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், வேலூர், கே வி குப்பம், சேலம், ஆத்தூர், நாமக்கல், ராசிபுரம், ஈரோடு, பவானி, திருப்பூர், கோவை, கோவை தெற்கு, சூலூர், கரூர், அரவக்குறிச்சி, விருதுநகர், ராஜபாளையம், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி,
மேற்கண்ட பட்டியலில் இருந்து தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென பாஜக கோரிக்கை வைத்துள்ளதாகவும் இதுகுறித்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.





















