Connect with us

தமிழ்நாடு

மாநிலங்களவை தேர்தல்: அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த இரண்டு அரசியல் கட்சிகள்!

Published

on

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்பிக்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

காலியாக இருக்கும் 6 ராஜ்யசபா எம்பிக்களில் 4 எம்பிக்கள் திமுக கூட்டணிக்கும், இரண்டு எம்பிக்கள் அதிமுக கூட்டணிக்கு கிடைக்கும். இதில் திமுகவின் மூன்று வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன என்பதும் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அதிமுகவுக்கு 2 எம்பிக்கள் கிடைக்கும் என்ற நிலையில் ஜெயக்குமார் மற்றும் சென்னகௌ ஆகிய இருவருக்கும் ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து இரண்டு அரசியல் கட்சிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலை மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு தெரிவிக்கும் என்று கூறிய நிலையில் தற்போது பாமகவும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து அதிமுகவுக்கு 2 ராஜ்யசபா எம்பி பதவிகள் உறுதி ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Strong contextual links.