டிவி
நல்ல மாட்டுக்கு ஒரு சூடான அப்ப எருமை மாட்டுக்கு எத்தனை சூட.. கலைக்கட்டும் சண்டை!
Published
2 years agoon
By
seithichurul
பிக்பாஸ் வீட்டில் நேற்று சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா சம்பத் இடையில் தொடங்கப்பட்ட சண்டை அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது.
பிக்பாஸ் வீட்டின் 3வது நாள், 2வது ப்ரோமோவில் அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி இருவரும் சமைக்கின்றனர். அப்போது சுரேஷ் சக்கவரத்தி, அனிதா சம்பத்தைப் பார்த்துப் பேசாதே என்கிறார். அப்படி சென்னால் எல்லாம் பேசாமல் இருக்க முடியாது என்று கூறுகிறார்.
சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் அனைவரும் இவர்களையே பார்க்க, நான் மரியாதை கொடுக்கிறேன். நீ எல்லை மீறுகிறாய். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, என்னைச் செருப்பால் அடிப்பவர்கள் கிட்ட பேசவேண்டும் என்று அவசியம் இல்லை என்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி.
அப்போது அவர்கள் பின் வரும் பாலாஜி, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்றால், எருமை மாட்டுக்கு எத்தனை சூடு என கிண்டல் செய்கிறார். அதை கேட்டு அனிதா சம்பத் சிரிக்கிறார். ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தியிடம் நாம் 100 நாட்கள் இங்கு இருக்க வேண்டும் என்று சமாதானம் செய்ய முயற்சிக்க, வேண்டாம் எனக்கு, நான் மரியாதையோடு இருக்க வேண்டும். நான் வம்புக்கும் போக மாட்டேன். என்னங்க சின்னப்பொண்ணு, பெரிய பொண்ணு, அவங்க அடல்ட். சும்மா இருங்க என்று கோவமாக சுரேஷ் சக்கரவர்த்தி பேசுகிறார்.
You may like
-
அசீம்-மோடி, விக்ரமன் – ராகுல் காந்தி.. கமல் – சுப்ரீம் கோர்ட்: பிக்பாஸை ஒப்பிட்ட நெட்டிசன்!
-
பணப்பெட்டியை எடுத்து செல்லும் போட்டியாளர் யார்? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு
-
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜிபி முத்துவுக்கு அடித்த ஜாக்பாட்!
-
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராமின் சம்பளம் எவ்வளவு?
-
இந்த வாரம் டபுள் எவிக்சன்; வெளியேறிய 2 பிக்பாஸ் போட்டியாளர்கள் இவர்கள் தான்!
-
எதிர்பாராத திருப்பம்.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுபவர் இவரா?