வணிகம்
தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தில் பெரும் உயர்வு? ரூ.7,500 ரூபாயாக அதிகரிக்க பரிந்துரை!

தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதிய உயர்வு குறித்த மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தற்போது வழங்கப்பட்டுவரும் குறைந்தபட்ச EPS ஓய்வூதியம் ரூ.1,000 என்பது போதுமானதல்ல என நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. இதனை ரூ.7,500 வரை உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
🔹 2014ம் ஆண்டு, EPS திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.250 இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டது. அதன் பின் இதுவரை எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
🔹 இப்போது, பணவீக்கம் மற்றும் உயர்ந்த வாழ்க்கைச் செலவுகளை கருத்தில் கொண்டு, பாஜக எம்பி பசவராஜ் பொம்மை தலைமையிலான தொழிலாளர் நாடாளுமன்றக் குழு, EPS ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்த பரிந்துரைத்துள்ளது.
🔹 இந்த பரிந்துரை EPFO உறுப்பினர்கள் மற்றும் EPS ஓய்வூதியதாரர்கள் மட்டுமின்றி, எதிர்காலத்தில் ஓய்வூதியம் பெறவுள்ள ஊழியர்களுக்கும் மிகவும் சாதகமாக அமையும்.
EPF மற்றும் EPS எவ்வாறு வேலை செய்கின்றது?
தனியார் நிறுவன ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 12% EPF-க்காக கழிக்கப்படுகிறது. அதேபோல, நிறுவனம் வழங்கும் பங்களிப்பில்:
8.33% EPS-க்கு
3.67% EPF-க்கு செல்கிறது.
இவ்வாறு, ஒவ்வொரு மாதமும் சிறிய தொகை ஓய்வூதியமாக சேமிக்கப்படுகிறது, ஆனால் வாழ்நாள் நலனுக்கு இது முக்கிய பங்களிப்பாக அமைகின்றது.
EPS ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்பார்க்கப்படும் நன்மைகள்:
மாத ஓய்வூதியத்தில் பெரிய உயர்வு
அகவிலைப்படி வழங்கும் வாய்ப்பு
இலவச அரசு மருத்துவ சேவைகள்
குடும்ப நலத்திற்கான பாதுகாப்பு







