இந்தியா
ஒரே தகன மேடையில் பிபின் ராவத் அவரது மனைவி உடல்கள்: கண்ணீரில் ராணுவ வீரர்கள்!

ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரது உடல்களும் ஒரே தகமேடையில் வைத்து இறுதிச்சடங்கு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 14 பேர்கள் பயணம் செய்த நிலையில் ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளாகியதில் அதிலிருந்த 13 பேர் பலியாகி விட்டனர் என்பதும் விமானப்படை கேப்டன் வருண் சிங் மட்டும் உயிர் தப்பித்தார் என்பது குறிபிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த விபத்தில் பலியான பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் நேற்று டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உடல்களுக்கு குடும்பத்தினர் மலர்வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் இன்று பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உடல்கள் இறுதிச்சடங்கு செய்யப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் இருவரது உடல்களும் ஒரே தகன மேடையில் வைக்கப்பட்டு தகனம் செய்யும் பணிகள் நடைபெற்றது. இது குறித்த புகைப்படங்களும் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

















