செய்திகள்
இது தெரியாம கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் நஷ்டம் தான்!

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், பலர் இதன் கட்டணங்கள், வட்டி விகிதங்கள் பற்றிய முழு தகவலின்றி பயன்படுத்தி, பின்னர் பொருளாதார சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள்.
கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை
🔹 உங்களுக்கு ஏற்ற கிரெடிட் கார்டை தேர்வு செய்யுங்கள் – கேஷ்பேக், ரிவார்டு பாயிண்டுகள் போன்ற சலுகைகளை வைத்து தேர்வு செய்யலாம்.
🔹 வருடாந்திர கட்டணங்கள் & ஜாயினிங் கட்டணங்களை கவனமாக பாருங்கள் – சில கார்டுகளில் இந்த கட்டணங்கள் அதிகமாக இருக்கலாம்.
🔹 வட்டி விகிதம் முக்கியம் – செலுத்த வேண்டிய தொகையைத் தவிர்க்கும்போது, அதிக வட்டி கட்டும் நிலை ஏற்படும்.
🔹 கடனை முழுமையாக செலுத்துங்கள் – குறைந்தபட்சத் தொகையை மட்டுமே செலுத்தினால், அதிக வட்டி கட்ட நேரிடும்.
🔹 ஆன்லைன் சலுகைகளை சரிபாருங்கள் – சில கார்டுகள் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் கூடுதல் கேஷ்பேக் மற்றும் சலுகைகளை வழங்கும்.














