கிரிக்கெட்
பெங்களூரு த்ரில் வெற்றி: 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வென்றது!

16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 32வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.
பெங்களூர் 189 ரன்கள்
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 77 ரன்களும், டீ பிளஸ்சிஸ் 62 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி சார்பில் சந்தீப் ஷர்மா மற்றும் போல்ட் தலா 2 விக்கெட்டுகள் , அஸ்வின் மற்றும் சாஹல் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பெங்களூர் த்ரில் வெற்றி
190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 182 ரன்களை மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை ஹர்சல் படேல் வீசினார். முதல் 3 பந்தில் 2 பவுண்டரி உள்பட 10 ரன்களை எடுத்த அஸ்வின் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக படிக்கல் 52 ரன்களும், ஜெய்ஸ்வால் 47 ரன்களும், சாம்சன் 22 ரன்களும் எடுத்தனர்.