கிரிக்கெட்
சென்னை அணிக்கு 5வது வெற்றி: கொல்கத்தாவை வென்று முதலிடத்திற்கு முன்னேற்றம்!

16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 33 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.
சென்னை 235 ரன்கள்
தொடக்கம் முதலே அதிரடி காட்டிய சென்னை அணி ரசிகர்களுக்கு சிக்சர் மழை பொழிந்து ரசிக்க வைத்தது. இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ரஹானே 71 ரன்களும், சிவம் துபே 50 ரன்களும், கான்வே 56 ரன்களும் எடுத்தனர்.
இமாலய இலக்கை துரத்தி விளையாடிய கொல்கத்தா அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கொல்கத்தா அணியில் ஜாசன் ராய் 61 ரன்களும், ரிங்கு சிங் 55 ரன்களும் எடுத்தனர்.
சென்னை வெற்றி
இதனால் சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியைப் பெற்றது. சென்னை அணித் தரப்பில் தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டும், ஜடேஜா, பதிரானா, மொயீன் அலி, ஆகாஷ்சிங் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 7வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 5-வது வெற்றியாகும். இதன் மூலம் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.