கிரிக்கெட்
பந்துவீச்சில் அசத்திய பெங்களூரு: சொந்த மண்ணில் டெல்லியை வீழ்த்தியது!

16 வது ஐபிஎல் தொடரின் 20 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் – டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
பெங்களூர் 174 ரன்கள்
பெங்களூரு அணியில் விராட் கோலி மற்றும் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களம் கண்டனர். டு பிளிஸ்சிஸ் 22 ரன்னில் அவுட் ஆக, அடுத்து களம் இறங்கிய லோம்ரார் 26 ரன்கள், மேக்ஸ்வெல் 24 ரன்கள், ஹர்ஷல் படேல் 6 ரன்கள், தினேஷ் கார்த்திக் ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினார்கள். மறுமுனையில் நிலைத்து நின்ற விராட் கோலி 50 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களம் இறங்கியது. இம்பேக்ட் பிளேயராக களம் இறங்கிய பிரித்வி ஷா 0 ரன், மார்ஷ் 0 ரன், யாஷ் துல் 1 ரன் எடுத்த நிலையில் அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். நிதானமாக ஆடிய வார்னர் 19 ரன்னிலும், அபிஷேக் 5 ரன்கள், அக்சர் படேல் 21 ரன்கள் மற்றும் லலித் யாதவ் 4 ரன்களை எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் நிதானமாக ஆடிய மணிஷ் பாண்டே 50 ரன்களை சேர்த்து அவுட் ஆகினர். இறுதியில் டெல்லி அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
பெங்களூர் வெற்றி
இதன் மூலம் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெல்லி அணியை வீழ்த்தி 2வது வெற்றியைப் பதிவு செய்தது. மேலும், இது டெல்லி அணிக்கு 5வது தோல்வியாகும்.