சினிமா செய்திகள்
மணமகன் ‘பாகுபலி’ பிரபாஸ்- அமெரிக்க சாஃப்ட்வேர் தொழிலதிபரின் மகளைக் கைபிடிக்கிறார்?

‘பாகுபலி’ பிரபாஸ் விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ளார் என்ற செய்தி வைரலாகி வருகிறது.
தெலுங்கு நடிகர் ஆன பிரபாஸ், பாகுபலி திரைப்படத்துக்குப் பின்னர் தேசிய அளவில் கொண்டாடப்படும் நாயகன் ஆக வளர்ந்துவிட்டார். பாகுபலிக்கு பின்னர் பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வரும் பிரபாஸ் தற்போது சலார், அதிபுருஷ், ராதே ஷ்யாம் ஆகிய மூன்று பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார்.

படத்துக்கு ஒரு பாலிவுட் நட்சத்திரம் என கே.ஜி.எஃப் யஷ், ஸ்ருதிஹாசன், சயீஃப் அலி கான், தீபிகா படுகோன் என பிரம்மாண்ட நட்சத்திரங்கள் பிரபாஸ் உடன் இணைந்து நடித்து வருகின்றனர். அடுத்த 3 மூன்று ஆண்டுகளுக்கு பிரபாஸ் பிஸியாக உள்ள சூழலில் அவரது கல்யாண செய்திகள் மாதம் ஒன்றாவது வெளியாகி வைரல் ஆகி வருகின்றன. முதலில் பாகுபலியில் தன்னுடன் இணைந்து நடித்த அனுஷ்கா உடன் பிரபாஸ் கிசுகிசுக்கப்பட நாங்கள் நட்புடன் மட்டுமே பழகுகிறோம் என இருவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
தற்போது பிரபல் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகளை பிரபாஸ் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என செய்திகள் வெளியாகி வருகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த அந்த தொழிலதிபர் பிரபாஸ் பெற்றோர் உடன் திருமண பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறாராம். அமெரிக்க குடியுரிமை உள்ள மணமகளை விரைவில் பிரபாஸ் மணம் முடிப்பார் எனத் தெரிகிறது. பிரபாஸ் இன்னும் சம்மதம் தெரிவிக்காமல் இருப்பதால் திருமண நாள் குறிக்கப்படாமலே இருக்கிறதாம்.








