சினிமா செய்திகள்
நெட்ஃப்ளிக்ஸ் ‘மணி ஹெய்ஸ்ட்’ சீசன் 5 வெளியீட்டுத் தேதி..!

நெட்ஃப்ளிகா தளத்தில் வெளியாகி சர்வதேச கவனம் பெற்ற வெப் சீரிஸ் மணி ஹெய்ஸ்ட்.
இதுவரையில் மொத்தம் 4 பாகங்கள் மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸில் வெளியாகி உள்ளது. 2020-ம் ஆண்டுக்குள் ஐந்தாம் பாகம் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டு 2021 தொடக்கத்தில் மணி ஹெய்ஸ்ட்-5 வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகளால் உலகெங்கிலும் முடங்கிய சினிமா துறை தற்போது மீண்டு நிமிர்ந்து வருகிறது.

தற்போது மணி ஹெய்ஸ்ட் 5-க்கான பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளதாம். இதனால் நிச்சயமாக ஐந்தாம் பாகம் வருகிற ஆகஸ்ட் மாதம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதில் வரும் ப்ரொஃபசர் உள்ளிட்ட பல கதாபாத்திரங்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மணி ஹெய்ஸ்ட் 5-ம் பாகம் குறித்த அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது.


















