சினிமா செய்திகள்
அசுரன்? நம்ம வீட்டு பிள்ளை? வசூல் வேட்டையில் யார் கில்லி?

அசுரன் திரைப்படம் தனுஷின் திரை வரலாற்றில் மிகப் பெரிய பிளாக்பஸ்ட்டர் படமாக உருவெடுத்துள்ளதாக வசூல் நிலவரங்கள் கூறுகின்றன.
பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் அசுரன். இந்த நாவலின் கதையில் சில சினிமாதனங்களை சேர்த்து அதை படமாக உருவாக்கியிருந்தார் வெற்றிமாறன். தனுஷ் தான் ஏற்று இருந்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்து ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.
அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷ்க்கு தேசிய விருது என்ன ஆஸ்கரே கொடுக்கலாம் என்றெல்லாம் படத்தை பார்த்தவர்கள் கருத்து கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது 6 நாட்களில் அசுரன் திரைப்படம் 32 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 20 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களில் 6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
சென்னையில் நம்ம வீட்டுப் பிள்ளை (விமர்சனம்) திரைப்படம் 11 நாளில் 4.49 கோடி ரூபாயும், அசுரன் (விமர்சனம்) 4 நாளில் 2.24 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது.

















