தமிழ்நாடு
ஸ்டாலின் முதல்வராவார் என ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த ஜோதிடர்!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று பத்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது என்பதும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்முறையாக முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வர் பதவிக்கான வாய்ப்பே இல்லை என பாஜக மற்றும் அதிமுக பிரமுகர்கள் பலர் கூறிவந்தனர். ஆனால் கடந்த ஆண்டு ஜோதிடர் பாலாஜி ஹாசன் அவர்களை சந்தித்த ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் தனது கணவருக்கு முதல்வர் பதவிக்கான வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டபோது அவர் கண்டிப்பாக வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருந்தார். அவர் கணித்தபடியே தற்போது முக ஸ்டாலின் முதல்வராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அதிமுகவின் இரட்டை தலைமை முடிவுக்கு வந்து ஒரே தலைமையின் கீழ் அதிமுக இயங்கும் என்றும் பாலாஜி ஹாசன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதேபோலவே தற்போது ஒற்றை தலைமையை நோக்கிய அதிமுக சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.















