சினிமா
இது கொல மாஸ்!.. அதிர வைக்கும் அண்ணாத்த ‘வா சாமி’ பாடல் வீடியோ….

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான திரைப்படம் ’அண்ணாத்த’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரீலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் தீபாவளியன்று அதாவது நவம்பர் 4ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
‘அண்ணாத்த’திரைப்படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்துள்ளார். இன்னொரு விஸ்வாசம் திரைப்படம் இப்படம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் இடம் பெற்ற அண்ணாத்த அண்ணாத்த, சாரக்காற்றே மற்றும் மருதாணி என 3 பாடல்கள் ஏற்கனவே வெளியானது.
இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற ‘வா சாமி…பற்றி எரியும் நெருப்பு போல’ என்கிற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
இந்த பாடலை அருண்பாரதி எழுதியுள்ளார். இப்பாடலை முகேஷ் முகம்மது, நொச்சிப்பட்டி திருமூர்த்தி, கீழக்கரை சம்சுதின் ஆகியோர் பாடியுள்ளனர். இதில் திருமூர்த்தியும், சம்சுதினும் கண் பார்வை இல்லாதவர்கள். திருமூர்த்தி பாடல் பாடும் வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. எனவே, இசையமைப்பாளர் இமான் இப்பாடலை பாட அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.