டிவி
ஆல்யா மானசா இனியா சீரியலில் நடிக்க வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. இப்போது அவர் இனியா என்ற சீரியலில் நடித்து வரும் நிலையில், அதற்காக அவர் பெரும் சம்பளம் எவ்வளவு என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆல்யா மானசா ராஜா ராணி சீரியலில் நடித்த போது அதில் தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ராஜா ராணி சீரியல் முடிந்த பிறகு அவருக்குக் குழைந்தை பிறந்தது. தொடர்ந்து ராஜா ராணி 2 தொடரில் நடித்து வந்தார்.
ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா மானசா நடித்துக் கொண்டு இருக்கும் போது இரண்டாம் முறையாக அவர் கர்ப்பமான நிலையில் அதிலிருந்து இடையிலேயே வெளியேறினார். இப்போது குழந்தை பிறந்த பிறகு சாரிகம நிறுவனத்துக்காக இனியா என்ற சீரீயலில் ஆல்யா மானசா நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஆல்யா மானசா இனியா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாகப் பெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக ராஜா ராணி சீரியலில் நடிக்கும் போது ஆல்யா மானசா 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாகப் பெற்றுள்ளார். ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கும் போது 15 ஆயிரம் ரூபாய் சம்பளமாகப் பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.
ஆல்யா மானசாவின் இனியா சீரியல் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோவும் இப்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.