டிவி
விஜய் டிவி திடீர் எச்சரிக்கை அறிவிப்பு.. குழப்பத்தில் ரசிகர்கள்!

தமிழின் முன்னணி தொலைக்காட்சி சேனலான விஜய் டிவி, நாங்கள் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தோன்றுவதற்கான வாய்ப்பை வழங்கப் பணம் வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளது.
விஜய் டிவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவரின் கவனத்திற்கு, எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்பதற்காக டிஸ்னி ஸ்டார் மற்றும்/அல்லது ஸ்டார் விஜய் ( “அலைவரிசை”), அல்லது தயாரிப்பாளர்கள் அல்லது தயாரிப்பு நிறுவனமும் பணம் கேட்பதில்லை.
மேலும் எந்த ஒரு நவர்(கள்) மற்றும்/அல்லது நிறுவனம் மற்றும்/அல்லது அமைப்பு ஆகியோருக்கு எங்கள் அலைவரிசையில் ஒளிபரப்பப்படும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தோன்றுவதற்கான வாய்ப்பை, பணம் செலுத்தியோ அல்லது வேறு வகையிலோ, வழங்கவோ/செயல்படுத்தவோ நாங்கள் அங்கிகாரம் அளிக்கவில்லை.
ஸ்டார் விஜய் பெயரைப் பயன்படுத்தி வரும் இத்தகையைப் போலியாக வாய்ப்புகள் மற்றும் அழைப்புகளிலிருந்து மற்றும்/அல்லது இந்த அலைவரிசையின் பெயரைப் பயன்படுத்தி எந்த ஒரு நபர்/நிறுவனம்/அமைப்பு போன்றவை எங்களுடைய எந்த ஒரு நிகழ்ச்சியிலாவது நடிக்கவோ/தோன்றவோ வாய்ப்பை உறுதியளித்துத் தனிப்பட்ட தகவல்களையோ, புகைப்படங்களையோ, காட்சித் துணுக்குகளையோ அல்லது பணத்தையோ கோருபவர்களிடமிருந்தும் எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
இத்தகையைத் தவறான நபர்கள் அல்லது நிறுவனங்களிடம் இருந்து உங்களால் செலுத்தப்பட்ட பணம் அல்லது பகிரப்பட்ட தனிப்பட்ட தகவல்களால் உங்களுக்கு ஏற்பட்ட மற்றும்/அல்லது ஏற்படக்கூடிய எந்த விதமான இழைப்பு/சேதம் ஆகியவற்றுக்கு இந்த நிறுவனம் மற்றும்/அல்லது அலைவரிசை எந்த ஒரு விதத்திலும் பொறுப்புள்ளதாகவோ மற்றும்/அல்லது கடமைப்பட்டுள்ளதாகவோ இருக்காது.” என தெரிவித்துள்ளது.