உலகம்
புகார் அளித்தவர்களிடம் பாரிக்கர் சொன்னது என்ன.. வெளியான ரபேல் கடிதம்!

டெல்லி: ரபேல் ஊழல் தொடர்பாக காலையில் வெளியான கடிதத்தின் இன்னொருபக்கம் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த கடிதத்திற்கு அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் எழுதிய பதில் இதில் இடம்பெற்றுள்ளது.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக வெளியாகி உள்ள பாதுகாப்பு துறையின் கடிதம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தற்போது ரபேல் பிரச்சனை மீண்டும் உயிர் பெற்று இருக்கிறது.
அந்த கடிதத்தில் பிரதமர் மோடி, ரபேல் ஒப்பந்தம் நடந்த போது, தனியாக ரபேல் தொடர்பான பேரத்தை மறைமுகமாக பிரான்ஸ் நாட்டுடன் நடத்தினார். வேறு சிலர் பயன் அடைய வேண்டும் என்று தனி பேரத்தை பேசினார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழுவை மீறி பிரதமர் மோடி ஆலோசனை செய்தார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இது தொடர்பான முழு கடிதம் வெளியாகி இருக்கிறது. அதாவது அந்த கடிதத்தில், கீழ் பகுதியில் அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் எழுதிய பதில் இதில் இடம்பெற்று இருக்கிறது. இந்த புகாருக்கு அதே கடிதத்தில் மனோகர் பாரிக்கர் பதில் எழுதி உள்ளார். அதன் விவரங்களை தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதில் மனோகர் பாரிக்கர் அளித்திருக்கும் பதிலில், இந்த விஷயம் தொடர்பாக கடிதம் எழுதி இருக்கும் மோகன் குமார், பிரதமர் அலுவலகத்துடன் பேச வேண்டும். பிரதமர் மோடியிடம் பேசி இந்த பிரச்சனையை தீர்த்துக் கொள்ளுங்கள், என்று அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.




















