தமிழ்நாடு
அதிமுக நடத்திய ரகசிய எக்சிட் போல்: ஓபிஎஸ் மகனுக்கு வாய்ப்பில்லை!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகும். ஆனால் அதுவரை பொறுமை காக்க முடியாத அரசியல் கட்சிகள் ரகசிய எக்சிட் போல் நடத்தி வருகிறது.
எக்சிட் போல் கணிப்புகளை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் எக்சிட் போல் நடத்தக் கூடாது என்று சொல்லவில்லை. எனவே பல்வேறு கட்சிகள் தேர்தல் நடந்த அன்று எக்சிட் போல் நடத்தி ரிசல்ட் தருமாறு நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களை நாடியது. அந்த எக்சிட் போல் முடிவுகள் அந்த கட்சிகளுக்கு மட்டுமே கொடுக்கப்படும்.
இதேப்போல அதிமுக தரப்பு மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்றின் மூலம் எக்சிட் போல் நடத்தியிருக்கிறது. தமிழகம் முழுதும் இதற்காக 850 பேரை களமிறக்கி ஒவ்வொரு சட்டமன்ற வாரியாக வாக்களித்துவிட்டு வருபவர்களிடம் பேசி எக்சிட் போல் நடத்தியிருக்கிறது அந்த நிறுவனம். இந்த எக்சிட் போல் மாதிரிகள் மும்பைக்கு அனுப்பப்பட்டு ஒருவார கால ஆய்வுக்கு பின்னர், அறிக்கை போலவே எக்சிட் போல் ரிப்போர்ட் அதிமுக தரப்புக்கு கொடுக்கப்பட்டிருக்கு.
அந்த ரகசிய எக்சிட் போல் ரிசல்ட்டில் அதிமுக கூட்டணி 14 முதல் 17 மக்களவை இடங்களை கைப்பற்ற வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. அதில் எந்தெந்த இடங்கள் என்பதும் தெரிவிக்கபட்டிருந்தது. அதன்படி அதிமுக அணி வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகளில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிடும் தேனி தொகுதி இடம்பெறவில்லையாம். இந்த எக்சிட் போல் ரிசல்ட் தான் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு பேச்சாக உள்ளது.


















