சினிமா செய்திகள்
நடிகை பியா பாஜ்பாய் குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்: என்ன ஆச்சு?

ஏகன், கோ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை பியா பாஜ்பாய்க்கும் அவரது குடும்பத்தினருக்கும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நடிகை பியா பாஜ்பாய் ஜீவா நடித்த கோ திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதற்கு முன்னரே அவர் அஜித் நடித்த ஏகன் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் வெங்கட்பிரபு இயக்கிய கோவா உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
https://twitter.com/PiaBajpai/status/1389425473801818114
இந்த நிலையில் சற்று முன்னர் நடிகை பியா பாஜ்பாய் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது சகோதரர் காலமாகி விட்டதாக அறிவித்து உள்ளார். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த திரையுலகினர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பியா பாஜ்பாய் சகோதரர் எப்படி இறந்தார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





















