Connect with us

இந்தியா

ரூ.200 கோடி மோசடி: கார்த்தி பட நடிகை அதிரடி கைது!

Published

on

கார்த்தி நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான ’பிரியாணி’ படத்தில் நடித்த நடிகை ஒருவர் ரூபாய் 200 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்த்தி நடித்த பிரியாணி, மோகன்லால் நடித்த ரெட் சில்லீஸ், பாலிவுட் திரைப்படமான ’மெட்ராஸ் கஃபே’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை லீனா மரியா பால். இவர் கேரள மாநிலம் கொச்சியில் வசித்துவருகிறார் என்பதும், அங்கு பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை லீனா மரியாபால் டெல்லி காவல்துறையின் பொருளாதார பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட சுகாஷ் சந்திரசேகர் என்பவரின் காதலியான இவர் மருந்து நிறுவனம் ஒன்றின் முன்னாள் தலைவரின் மனைவியை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் தற்போது நடிகை லீனா மரியா கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது காதலர் சுகேஷ் சந்திரசேகர் தான் இரட்டை இலை சின்னம் வாங்கித்தருவதாக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள பல தொழில் அதிபர்களிடம் ரூபாய் 200 கோடி வரை மோசடி செய்திருப்பதாக மீண்டும் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது காதலி லீனா மரியா ஆகியோர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தற்போது விசாரணை நடந்து வருவதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Strong contextual links.