சினிமா செய்திகள்
நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி!

பிரபல காமெடி நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் ஆன நிலையில் இந்த படத்தின் பணிகளுக்காக அவர் சமீபத்தில் லண்டன் சென்றிருந்தார்.
ஏற்கனவே லண்டன் உள்பட இங்கிலாந்து முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் லண்டனில் இருந்து திரும்பிய வடிவேலுவுக்கு கொரோனா பரவி உள்ளது.
இதனை அடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் அவரது உடலை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தேவையான சிகிச்சைகளை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அவர் நடிக்கயிருக்கும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


















