சினிமா செய்திகள்
46 வயது சூர்யாவுக்கு 18 வயது நடிகை ஜோடியா? நெட்டிசன்கள் கிண்டல்!

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகும் ’சூர்யா 41’ திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நெட்டிசன்கள் இந்த ஜோடியை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் .
சூர்யாவுக்கு தற்போது 46 வயது என்றும் கீர்த்தி ஷெட்டிக்கு வெறும் 18 வயதுதான் என்று கிட்டத்தட்ட மகள் வயதுள்ள நடிகையுடன் சூர்யா ஜோடி சேர்ந்து நடிப்பதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றார்கள்.
மேலும் சூர்யாவின் மகளுக்கே தற்போது 14 வயது ஆகும் நிலையில் 18 வயது நடிகையுடன் அவர் ஜோடியாக அவர் நடிப்பது சரிதானா என்றும், ஜோதிகா இந்த படத்தின் தயாரிப்பாளராக இருந்தும் அவர் இதை எப்படி அவர் அனுமதிக்கிறார் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அப்படிப் பார்த்தால் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர்களும் மிகக்குறைந்த வயது நடிகைகளுடன் நடித்து வருகின்றனர் என்று சூர்யா ரசிகர்கள் அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இருந்தாலும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க 18 வயது நடிகை ஒப்பந்தமாகி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


















