சினிமா செய்திகள்
பிரபல ஹீரோவின் அப்பா மீது ரூ.2.70 கோடி மோசடி புகார் கொடுத்த சூரி!

நிலம் வாங்கி தருவதாக, நடிகர் சூரியிடம் விஷ்ணு விஷாலின் தந்தை மற்றும் தயாரிப்பாளர் ஒருவர் 2.70 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீர தீர சூரன் படத்தில் சூரி நடிக்க ரூ.40 லட்சம் சம்பளமாகப் பேசப்பட்டுள்ளது. ஆனால் அதை தராமல் தயாரிப்பு தரப்பு இழுத்து வந்துள்ளது. பின்னர் 2.30 கோடி ரூபாய் கொடுத்தால் 3 கோடி ரூபாய் மதிப்பாலான சொத்தை சூரிக்குப் பெயர் மாற்றி விடுவதாகவும் கூறியுள்ளனர்.
அந்த தொகையைச் சூரி செலுத்திய பிறகும், அந்த சொத்தை சூரியின் பெயரில் மாற்றி தராமல் இழுத்து வந்துள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாகப் படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
எனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். இதை விசாரித்த நீதிபதிகள் நிலை மோசடி பிரிவு கீழ் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டனர்.












