தமிழ்நாடு
ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பாஜக இழந்து விட்டது: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

பாஜக தொடர்ந்த வழக்கில் நேற்று குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து ராகுல் காந்தி எம்.பி பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

#image_title
ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ராகுல்காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்து உள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை என பல அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மீது நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும். பதில் சொல்லாமல் கேள்வி கேட்டவரை அப்புறப்படுத்துவது ஒன்றிய அரசுக்கு அழகல்ல.
இந்த தகுதி நீக்க நடவடிக்கைகள் மூலமாக ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பாஜக இழந்து விட்டது. ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனநாயக உரிமையை பறிப்பதாகும். தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.