வீடியோ
ஜோசப் விஜய் ஆக ‘பிக்பாஸ்’ ஆரி… வெளியான அலேகா ட்ரெய்லர்!

ஜோசப் விஜய் ஆக பிக்பாஸ் புகழ் ஆரி நடித்துள்ள அலேகா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
முன்னாள் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா மற்றும் இந்நாள் பிக்பாஸ் புகழ் ஆரி இருவரும் இணைந்து நடித்துள்ள படம் அலேகா. இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் தற்போது அலேகா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. ட்ரெய்லரின் முதல் பாதியில் ஆரி-ஐஸ்வர்யா இடையேயான காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இரண்டாம் பகுதியில் குழந்தையைத் தேடும் தம்பதியராக ஆரி- ஐஸ்வர்யா வருவது போன்று காண்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஆரி தன்னுடைய பெயரை ஜோசப் விஜய் எனக் கூறுவது போன்று ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. இந்தக் காட்சி மட்டும் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆரி நடிப்பில் விரைவில் பகவான் என்ற முதல் இலுமினாட்டி படமும் விரைவில் வெளிவர உள்ளது.