சினிமா செய்திகள்
கோவை மக்களுக்கு இலவச மாஸ்க் கொடுத்து உதவிய பிக்பாஸ் ஆரி!
Published
2 years agoon
By
Shiva
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வை பலரும் ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளரான ஆரி கோவையில் சமீபத்தில் இலவசமாக பொதுமக்களுக்கு மாஸ்குகளை வழங்கினார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
கோவை தெருக்களில் அவர் நடந்து சென்று யாரெல்லாம் மாஸ்க் அணியவில்லையோ அவர்களுக்கு மாஸ்க்கை இலவசமாகக் கொடுத்து இனிமேல் மாஸ்க் அணிந்து தான் வெளியே செல்ல வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
டூவீலரில் வந்த இளைஞர் ஒருவருக்கும் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கும் வயதான நபர் ஒருவருக்கும் அவர் மாஸ்க் கொடுத்த காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. மேலும் இந்த வீடியோவின் கீழே கமென்ட் செய்துள்ள சனம்ஷெட்டி ஆரிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
We started the awareness rally..wear mask 😷 stay healthy #coimbatore pic.twitter.com/jgyQeCKD1t
— Aari Arujunan (@Aariarujunan) April 11, 2021
You may like
மறுபடியும் முதல்ல இருந்தா? கோவிட் விதிமுறைகளை அமல்படுத்திய கர்நாடகா அரசு: முழு விபரங்கள்!
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு? சென்னையில் மட்டும் இவ்வளவா?
மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்: மீண்டும் வருகிறது கொரோனா கட்டுப்பாடு!
சென்னையில் மாஸ்க் கட்டாயம்: சென்னை மாநகராட்சி உத்தரவு
பள்ளிக்கு சென்ற முதல் நாளே பரிதாபமாக உயிரிழந்த 8ஆம் வகுப்பு மாணவி!
இன்று முதல் கோவை – ஷீரடி தனியார் சிறப்பு ரயில்: கட்டணம் இவ்வளவா?