Connect with us

தமிழ்நாடு

பிபிசி வருமான வரித்துறை ரெய்டு: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

Published

on

2002-ஆம் ஆண்டு பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது நடந்த குஜராத் கலவரம் குறித்து இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் ஒன்று எடுத்து வெளியிட்டது. இதற்கு இந்தியாவில் தடை விதித்த மத்திய அரசு, நேற்று டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனையை நடத்தின. இந்த ஆய்வு இன்றும் தொடர உள்ள நிலையில் இதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

#image_title

குஜராத்தில் கோத்ரா ரெயில் எரிப்புக்கு பின் வெடித்த மதக்கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது அங்கு முதல்வராக மோடி இருந்தார். இந்நிலையில் குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய குஜராத் முதல்வரும், தற்போதைய பிரதமருமான மோடி என்று குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதித்த மத்திய அரசு, சமூகவலைதளங்களில் பகிர்வதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதள நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி ஆய்வு நடத்தினர்.

இதனையடுத்து தமிழக முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வருமான வரித்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், ஒரு துடிப்பான ஜனநாயகத்திற்கு வெளிப்படையான, சுதந்திரமான நிறுவனங்கள் இன்றியமையாதவை. ஆனால் அத்தகைய மதிப்புமிக்க நிறுவனங்கள் பாஜக அரசின் கீழ் முற்றிலும் தனது சுதந்திரத்தை இழந்துள்ளன. அதில் தற்போது பிபிசி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனையும் சேர்ந்துள்ளது.

இந்தியாவின் ஜனநாயகத்தையும், பத்திரிக்கைச் சுதந்திரத்தையும் அழித்தவர்களை மக்கள் கவனமாக பர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு வரவிருக்கும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் பிரஸ் கிளப் ஆஃப் இந்தியாவும் ஊடகங்கள் மீதான தாக்குதல் இது என கண்டன தெரிவித்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்3 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்3 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்3 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்2 நாட்கள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வணிகம்6 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
"get your painting estimate in madison, wi – fine finishes painting".