இந்தியா
ஜியோ, ஏர்டெல் பயனாளிகளே தயாராக இருங்கள்.. எகிறப்போவுது போன் பில்!

இந்தியாவில் உள்ள தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கலான ஜியோ, ஏர்டெல் உள்பட அனைத்து நிறுவனங்களும் சுமார் 10% கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு உள்ளதால் இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவிலுள்ள தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் 10 சதவீத அளவிற்கு கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பொருளாதார மந்தநிலை, ஊழியர்களின் சம்பள உயர்வு ஆகிய காரணங்களால் நிறுவனங்களின் வருவாய் குறைந்து வருவதாகவும் இதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் ஜியோ, வோடபோன், ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் சராசரி வருவாய் குறைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து 10 சதவீதம் வரை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளன. ஏற்கனவே ஏர்டெல் ரூ..99 பேக்கிங் பிளானை திரும்ப பெற்று உள்ளது என்பதும் தற்போது போஸ்ட்பாய்டு மட்டும் பிரிபெய்டில் ரூ.99 என்ற பிளான் இல்லை என்பதும் ஒருசில கிராமங்களில் மட்டும் இந்த பிளான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை தற்போது ஒரு சில நகரங்களில் தொடங்கியுள்ள நிலையில் 5ஜி சேவைகக்கு என தனியாக கூடுதல் கட்டணங்களை இதுவரை வசூலிக்காமல் உள்ளது. ஆனால் விரைவில் 5ஜி சேவை நாட்டில் உள்ள பெரும்பாலான நகரங்களுக்கு அளிக்கப்பட்ட உடன் 5ஜி சேவைகளுக்காக தனியாக கூடுதல் கட்டணம் வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.
மொத்தத்தில் செல்போன் பயன்பாட்டாளர்கள் இனி அதிக அளவிலான பில் கட்டணத்தை கட்டுவதற்கு தயாராகி கொள்ளும்படி கூறப்படுகிறது.







