இந்தியா
பீகாரில் காங்கிரஸ் பெரிய பேரணி.. காந்தி மைதானத்தில் ராகுல் காந்தி!

பாட்னா: பீகாரில் காங்கிரஸ் தலைமையில் இன்று மிகப்பெரிய பேரணி நடத்தப்பட இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் இந்த பேரணி கடந்த 30 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய பேரணி என்று கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தமிழகம், பீகார் ஆகிய நான்கு மாநிலங்கள் மிக முக்கியமான மாநிலங்கள் ஆகும். இங்கு நிறைய லோக்சபா தொகுதிகள் இருப்பதால் இங்கு வெற்றிபெறவே பாஜகவும், காங்கிரசும் அதிகம் ஆசைப்படும்.
தற்போது பீகாரில் காங்கிரஸ் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவாகி உள்ளது. லோக் சபா தேர்தலில் போட்டியிடும் வகையில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இதை முன்னிட்டு தற்போது காங்கிரஸ் கட்சி அங்கு பெரிய பேரணியை நடத்துகிறது.
காங்கிரஸ் கட்சி சார்பாக பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இந்த பேரணி நடத்தப்படுகிறது. 1990களின் தொடக்கத்தில் கடைசியாக காங்கிரஸ் அங்கு பேரணி, கூட்டங்களை நடத்தியது. அதன்பின் 30 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் காங்கிரஸ் மீண்டும் அங்கு பேரணி நடத்த உள்ளது. ராகுல் காந்தி தலைமையில் இந்த பேரணி நடக்கிறது.



















