சினிமா செய்திகள்
முன்னாள் மனைவி மீது முறைகேடு வழக்கு பதிவு செய்த டி.இமான்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பிரபல இசையமைப்பாளர் டி இமான் தனது முன்னாள் மனைவி மீது மோசடி வழக்கு பதிவு செய்திருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
பிரபல இசையமைப்பாளர் டி இமானுக்கும் மோனிகா ரிச்சர்ட் என்பவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெரிய குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் டி இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனைவி மோனிகாவை தான் பிரிந்து விட்டதாகவும் இனி நாங்கள் கணவன் மனைவி இல்லை என்றும் அறிவித்து இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது முன்னாள் மனைவி மோனிகா மீது டி.இமான் வழக்குப்பதிவு செய்துள்ளார். தங்களுடைய குழந்தைகளின் ஒரிஜினல் பாஸ்போர்ட் தன்னிடம் இருக்கும் நிலையில் அந்த பாஸ்போர்ட்டை மறைத்துவிட்டு குழந்தைகளுக்கு புதிய பாஸ்போர்ட்டை மோனிகா மோசடியாக பெற்றுள்ளதாக டி இமான் அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து உரிய பதில் அளிக்கும்படி மோனிகா மற்றும் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஆகியோருக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

















