சினிமா செய்திகள்
4 கார் இருக்கும்போது சைக்கிள்ல்ல ஏன் போனிங்க: விஜய்யை வச்சு செய்யும் நெல்சன்
Published
10 months agoon
By
Shiva
4 கார் இருக்கும்போது சைக்கிளில் ஏன் போனீர்கள் என விஜய்யை வச்சு செய்யும் வகையில் நெல்சன் கேட்ட கேள்வியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் விஜய்யை பேட்டி எடுத்த நெல்சனின் நிகழ்ச்சி வரும் 10 ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
இதன் முதல் புரோமோ விடியோ நேற்று வெளியான நிலையில் சற்றுமுன் அடுத்த புரமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் தேர்தலில் ஓட்டுப்போட 4 கார் இருக்கும்போது ஏன் சைக்கிளில் போனிங்க’ என விஜய்யிடம் நெல்சன் கேள்வி கேட்கிறார்.
அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் விஜய் சிரித்து மழுப்பியபடி அடுத்த கேள்வியைக் கேளுங்கள் என்று கூறுகிறார். விஜய் தேர்தலின்போது சைக்கிளில் ஓட்டு போட சென்றதால் ஏற்பட்ட பல பிரச்சனைகள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து விஜ்ய்யிடம் நெல்சன் இந்த கேள்வியை கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கேள்விக்கு பின்புலமாக சன் டிவியின் நிர்வாகம் இருக்குமோ என்ற சந்தேகத்தையும் விஜய் ரசிகர்கள் கிளப்பி வருகின்றனர். மொத்தத்தில் இந்த பேட்டியில் விஜய் நெல்சனை எப்படி சமாளித்தார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
Also Read:
விஜய் சைக்கிளில் வந்தது ஏன்? பப்ளிசிட்டியா? பெட்ரோல் விலையை குத்திக்காட்டவா?
You may like
-
பிப்ரவரி 1,2,3… பெரிய சம்பவத்துக்கு ரெடியாகுங்க; இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த தளபதி 67 ஹின்ட்!
-
250 கோடி வசூல்! துணிவு படத்தை துரத்தி துரத்தி அடிக்கும் வாரிசு; போனி கபூர் அமைதியோ அமைதி!
-
‘தளபதி 67’ படத்தில் 6 வில்லன்கள்.. யார் யார் தெரியுமா?
-
சக்கர பொங்கல்.. வெண் பொங்கலுக்கு நடுவே கரும்பா நிக்கிறாரே.. விஜய் அட்மின் விட்டா ஹீரோவாகிடுவாரு போல!
-
இது 100 பர்சன்ட் தெலுங்கு படம்ப்பா! டோலிவுட்டில் சக்கைப் போடு போடும் வாரிசு; தில் ராஜு சம்பவம்!
-
ஆட்டநாயகன் விஜய் சதம் அடித்தாரா? சறுக்கினாரா? எப்படி இருக்கு வாரிசு திரைப்படம்!