Connect with us

சினிமா செய்திகள்

மன்மதலீலை’ கில்மா படம் கிடையாது: இயக்குனர் வெங்கட்பிரபு விளக்கம்!

Published

on

வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக்செல்வன் நடிப்பில் உருவாகிய ’மன்மதலீலை’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் ’மன்மதலீலை’ படம் கில்மா படம் கிடையாது என்றும் இயக்குனர் வெங்கட்பிரபு விளக்கியுள்லார். இந்த செய்தியாளர் சந்திப்பில் ’மன்மதலீலை’ படத்தின் குழுவினர் பேசிய விபரங்கள் பின்வருமாறு:

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் T சிவா பேசியதாவது…

நிச்சயமாக இது ஆபாசமான படமல்ல. இயக்குநர் பாலசந்தர் இருந்து அவர் எடுத்திருந்தால் பாலச்சந்தரின் மன்மதலீலை என்று சொல்லக்கூடிய தகுதி கொண்ட படம். குழந்தைகளுடன் குடும்பங்களுடன் பார்க்க தகுதியுள்ள படம். மாநாடு படத்தை விட அதிகமான டிவிஸ்ட்டுடன் இந்தப் படம் உங்களை ஆச்சரியப்படுத்தும், வெங்கட் பிரபு மிக அட்டகாசமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த காலத்தின் ஜெமினி கணேசன் அசோக் செல்வன் தான். இந்தப் படம் மிக ஜாலியான படம். படம் மிக பெரிய வெற்றி பெறும் வாழ்த்துக்கள்

நடிகை ரியா சுமன் பேசியதாவது…

என்னுடைய முந்தைய படங்களை விட இப்படம் மிக வித்தியாசமான படம், வெங்கட் பிரபு படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அவர் எனக்கு லீலா பாத்திரத்தை தந்ததற்கு நன்றி. அசோக் செல்வனுடன் வேலை பார்த்தது மிக ஜாலியாக சந்தோஷமாக இருந்தது.  இந்தப் படத்தை நீங்கள் சந்தோஷமாக பார்த்து ரசிக்கலாம்.  எல்லோருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் தமிழ் A அழகன் பேசியதாவது…

இப்பட வாய்ப்பு தந்ததற்கு வெங்கட் பிரபு சாருக்கு நன்றி. அசோக் என் காலேஜ் சீனியர் அவருடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம். நான் வேலை பார்த்த தெலுங்கு படத்திலும் சம்யுக்தா ஹெக்டே தான் நாயகி. இதிலும் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. படம் நன்றாக வந்துள்ளது எல்லோருக்கும் நன்றி.

நாயகி சம்யுக்தா ஹெக்டே பேசியதாவது..

எல்லோருக்கும் மிக்க நன்றி. இந்த படத்தில் வேலை செய்தது மிக மிக சந்தோஷமாக இருந்தது. ஏப்ரல் 1 தியேட்டரில் வருகிறது எல்லோரும் வந்து பாருங்கள். படம் உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் நன்றி.

நாயகன் அசோக் செல்வன் பேசியதாவது…

காலேஜ் முடிந்த காலத்தில் நண்பர்களுடன் சென்னை 28 பார்த்தோம்,  இப்போது வெங்கட் பிரபு அண்ணாவுடன் வேலை பார்த்தது வரம், கொரோனா டைம்ல பரிசோதனை முயற்சியாக இதை பண்ணலாம் என்றார். நடுவில் எனக்கு கொரோனா எல்லாம் வந்து போனது, அந்த நேரத்தில் எடுத்தது தான் இந்த முத்த காட்சிகள் எல்லாம். ஆனாலும் ஹீரோயின்கள் யாரும் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை. பலர் இந்தப் படம் ஏன் செய்தீர்கள் என கேட்டார்கள், இந்த படத்தில் எந்த கெட்ட விசயமும் இல்லை என எனக்கு தெரிந்தது. என்னை நான் ஒரு நடிகனாக மட்டுமே அடையாளப்படுத்தி கொள்ள விரும்புகிறேன். இந்தப் படம் மிக மிக நல்ல படம். எனக்கு வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் பேசியதாவது…

கேமராமேன் தமிழ் A அழகன் என் உதவியாளர் தான். மிக நல்ல பையன். அவரது லீலைகளையே ஒரு படமாக எடுக்கலாம். வெங்கட் பிரபு ஒளிப்பதிவாளரை ஈஸியாக வைத்து கொள்வார். இசை நன்றாக இருக்கிறது. படமும் அழகாக வந்துள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் சிங்காரவேலன் பேசியதாவது….

திரைக்கதையில் அசத்தகூடியவர்களில் சமீப காலத்தில் வெங்கட் பிரபுவை மிஞ்சும் வேறொருவர் இல்லை. மாநாடு படத்தில் அந்தளவு அசத்தியிருப்பார் அதே போல் இந்தப்படத்திலும் மிக வித்தியாசமாக அசத்தியுள்ளார். இந்தப் படத்திற்கு பிறகு அனைவரும் திரைக்கதைக்காக வெங்கட் பிரபுவை பாராட்டுவார்கள். எல்லோருக்கும் லாபம் தந்த படம் மாநாடு, அதே போல் இந்த படமும் வெற்றி பெறும் நன்றி.

நடிகர் நிதின் சத்யா பேசியதாவது…

இந்தப்படம் நான் பார்த்து விட்டேன் இது அடல்ட் படம் கிடையாது. இது வெங்கட் பிரபுவின் விருந்தாக இருக்கும். அசோக் செல்வனை பார்த்து பொறாமையாக உள்ளது. இந்தப் படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும்.

இசையமைப்பாளர் பிரேம்ஜி பேசியாதாவது…

அண்ணன் படத்திற்கு நான் இசையமைத்து படம் ரிலீஸாவது மகிழ்ச்சி. கல்யாணமான அனைவரும் பார்க்க வேண்டிய படம், 2010 லும் 2020 லும் நடக்க கூடிய கதை. படத்தில் பெண்களை உஷார் செய்வது எப்படி என அசோக் சொல்லி தருவார்.  எல்லோரும் பார்க்கக்கூடிய படம். எங்க அண்ணனுக்கு பயங்கரமான மூளை. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இந்த படத்தில் நிறைய க்ளாப்ஸ் கிடைக்கும். படத்தை தியேட்டரில் பார்த்து ரசியுங்கள் நன்றி.

நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் பேசியதாவது…

இந்தப்படத்திற்கு என்னை அழைத்த போது நான் பொதுவாக சினிமா விழாக்களுக்கு வருவதில்லை என மறுத்தேன், நடிகர் சங்கத்திற்கு நிதி அளிப்பதாக சொன்னார்கள் நடந்தே வருகிறேன் என்றேன். இந்தப்படம் எல்லோரும் நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள் இது அடல்ட் படம் அல்ல, வெங்கட் பிரபு மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் தம்பியுடன் இணைந்து நல்ல படங்கள் தந்து வருகிறார். இந்தப் படம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் வெங்கட் பிரபு பேசியதாவது…

என்னுடைய உதவியாளர் மணிவண்ணனின் கதை தான் இது. கொரோனா காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்ற பொது இந்தக் கதை வந்தது, அருமையான கதை. மணிவண்ணன் பெரிய இடத்திற்கு செல்வார். அசோக்கை கொரோனா நேரத்தில் சந்தித்து இந்தக் கதை சொன்னேன் உடனே செய்யலாம் என்றார். என் உடன் பணிபுரிந்த கலைஞர்களின் உதவியாளர்கள் மூன்று பேருடன் இப்படம் செய்துள்ளேன். யுவனின் உதவியாளர் தான் பிரேம்ஜி. இப்படம் கில்மா படம் கிடையாது. எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், நான் அப்படி படம் எடுக்க மாட்டேன். இந்தப் படம் கண்டிப்பாக அனைவரும் இணைந்து ரசிக்கும் படியான படமாக இருக்கும் உங்களுக்கு பிடிக்கும். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி.

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் T.முருகானந்தம் தயாரிக்க, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில், நவீன இளைஞனின் வாழ்வில் நடக்கும் லீலைகளை சொல்லும் ஒரு அருமையான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் தான், “மன்மதலீலை”. இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

இந்நிகழ்வினில் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக நடிகர் சங்க துணைத் தலைவர் திரு பூச்சி முருகனிடம், நடிகர் சங்க வளர்ச்சி நிதியாக ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலை அளிக்கப்பட்டது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்23 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்24 மணி நேரங்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்5 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்1 நாள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

Translate »
sonic crossworlds unlock guide : how to earn every character and vehicle offline and online. Village mentality : the power of community for mental wellness. Як погодні умови впливають на результат.